வகுப்புக்கு வந்த சந்தை!

எடை பாடத்துக்கு உரியது.

மாணவர்களிடம் தங்கள் வீட்டில் இருந்து காய்கறிகள், பழங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள், தானியங்கள் போன்றவற்றைக் கொண்டுவரச் சொன்னேன். எடை அளவுகளான கிராம், கிலோகிராம் போன்றவை பற்றி விளக்கிக் கூறினேன். பிறகு, மாணவர்கள் கொண்டுவந்த பொருள்களால் சந்தை அமைத்தோம். ‘’தக்காளி கிலோ 20 ரூபாய், துவரம் பருப்பு கிலோ 50 ரூபாய் வாங்க! வாங்க!’’ என்றபடி ஜோராக சந்தையில் விற்பனை தொடங்கியது. மாணவர்களே விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவராக நடித்தார்கள். மாணவர்கள் கேட்கும் எடைக்குப் பொருளைச் சரியான அளவில் அளந்து கொடுப்பதும், அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு, சரியான சில்லறையை வழங்குவதுமாகச் செயல்பாடு தொடர்ந்தது. அளவைகளைப் பயன்படுத்தும் முறை, அளக்கும் முறை, சரியான சில்லறை வழங்குதல் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கினேன். இதன் மூலம், கிராம் மற்றும் கிலோகிராம் போன்ற அளவுகள் பற்றியும், அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடு பற்றியும் மாணவர்கள் அறிந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick