புத்தக உலகம் - இம்சை அரசி எலிக்குட்டி!

கிங் விஸ்வா

2012-ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்க, லட்சக்கணக்கான சிறுவர்கள் எதிர்பார்த்ததும் அமெரிக்க அதிபர் பற்றிய ஒரு விஷயத்தைத்தான். ஆனால், அது பேபி மௌஸ் என்ற காமிக்ஸ் தொடரில் ‘‘அமெரிக்க அதிபராக,  பேபி மௌஸ்” (Babymouse for President) என்ற கதைக்காகத்தான். அந்த ஆண்டின் ஐஸ்னர் விருது, இந்த காமிக்ஸ் புத்தகத்துக்கே கிடைத்தது. ஒரு எலிக்குட்டியை மையமாகவைத்து எழுதப்பட்டுவரும் இந்தத் தொடரில், இதுவரை 20 புத்தகங்கள் வந்துள்ளன. முதல் புத்தகமே, 18 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை செய்தது. பேபி மௌஸ், இந்த ஆண்டு மே மாதம் மேல்நிலைப்பள்ளிக்குப் போவதாக இந்தத் தொடரின் 21-ஆவது புத்தகம் தயாராகிவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick