‘வேண்டாம் ஜங்க் ஃபுட்!’

பிரதமருக்குக் கடிதம் எழுதிய பள்ளி மாணவிஷோபனா எம்.ஆர்

ன்றைய நவீன காலத்தில், குழந்தைகளை ஈர்க்கும் உணவாக இருக்கிறது, ஜங்க் ஃபுட் என்கிற பதப்படுத்தப்பட்ட உணவுகள். ஜங்க் ஃபுட் தொடர்பான விளம்பரங்களும் குழந்தைகளையே குறிவைக்கின்றன. நூடுல்ஸ், ஃப்ரெஞ்சு ஃப்ரை, பர்கர், பீட்சா எனச் சென்னையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பார்க்க முடிகிறது. பெற்றோர்களும் தங்களின் அவசர வாழ்க்கைச் சூழ்நிலையில், குழந்தைகளைச் சமாதானப்படுத்த ஓர் எளிய வழியாக, இதுபோன்ற உணவுகளை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

இப்படி, குழந்தைகள் உலகத்துக்குள் ஜங்க் ஃபுட் நுழைந்துவிட்டது. கவலையைக் கிளப்பும் இந்தச் சூழ்நிலையில், ஜங்க் ஃபுட் அளிக்கும் தீமையை உணர்ந்து, அதை எதிர்த்துக் குரல் கொடுத்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்புப் பள்ளி மாணவி ஸ்வாதி அனன்யா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick