மைனஸை ப்ளஸ் ஆக்கிய மிஸ்டர் பீன்!

ர.சீனிவாசன்

“அப்பா, ஸ்கூல்ல நமக்குப் பிடிச்ச பிரபலத்தைப் பத்தி எழுதிட்டு வர சொல்லியிருக்காங்க. இதுதான் இன்னிக்கு ஹோம்வொர்க்!” என்றான் ரகு. ஏழாம் வகுப்புப் படிக்கும் அவன் படிப்பில் படு சுட்டி.

ஆபீஸ் கணக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ரகுவின் அப்பா சற்றே நிமிர்ந்து பார்த்தார். “ரகு, நான் ஒருத்தர் பத்தி சொல்றேன். நோட்ஸ் வேணா எடுத்துக்கோ. ஆனா, கட்டுரை நீதான் எழுதணும்.’’என்றார்.

ரகு சற்றே சிணுங்கிவிட்டு, “சரி! இருங்க நான் ரெடியாயிட்டு வரேன்” என்று உள்ளே ஓடினான்.

“ரகு... ரோவன் அட்கின்ஸனைத் தெரியுமா?”

“ஹேய்ய்ய்யா! நம்ம மிஸ்டர் பீன்!”

``அவரேதான். சொல்றேன் எழுதிக்கோ!” என்றார் சாரதி.

“ரோவன் அட்கின்ஸனின் அப்பா ஒரு விவசாயி மற்றும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர். மிஸ்டர் பீனுக்கு இரண்டு அண்ணன்கள். பீன்தான் கடைக்குட்டி. ரோவன், நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக் இன்ஜினீயர் பட்டம்பெற்று ஆக்ஸ்ஃபோர்டில் இருக்கும் குயின்ஸ் கல்லூரியில் எம்.எஸ்ஸி முடித்தார். ஆக்ஸ்ஃபோர்டில் இருக்கும்போது நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக நகைச்சுவை நாடகக் குழு ஒன்றில் இணைந்தார்.”

“அப்பா, இதெல்லாம் நெட்லயே கிடைக்கும். வேற ஏதாவது சுவாரஸ்யமா சொல்லுங்க” என்று இடைமறித்தான் ரகு.

“இப்போ கேளு!” என்று தொண்டையைக் கனைத்துக்கொண்ட சாரதி, “ரோவன் அட்கின்ஸனுக்கு மிகப் பெரிய விசிட்டிங் கார்டாக, அதாவது அவரின் ஆரம்பக் காலத்தில் பெரிய அடையாளமாக இருந்தது, BBC ரேடியோ 3-யில் அவர் நடத்திய மிகவும் வித்தியாசமான நகைச்சுவை நிகழ்ச்சிதான். இதில் புகழ்பெற்ற பிரபலங்களைப் பேட்டி எடுப்பார் ரோவன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவரே அந்தப் பிரபலமாகவும், பேட்டி எடுப்பவராகவும் மாறி மாறி பேசிக்கொள்வார். ரோவனின் நகைச்சுவைக்காகவே நிகழ்ச்சி செம ஹிட்” என்று ஆச்சர்யப்படுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick