படிக்க இரண்டு புத்தகங்கள்! - புத்தக விமர்சனம் | Book Review - Chutti Vikatan | சுட்டி விகடன்

படிக்க இரண்டு புத்தகங்கள்! - புத்தக விமர்சனம்

அழகுசுப்பையா

முன்பெல்லாம் இரவில் பெரியவர்கள் கதை சொல்லிக் குழந்தைகளைத் தூங்கச்செய்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் கதை சொல்வதும் கேட்பதும் இல்லாமலே போய்விட்டது.  இதனைப் போக்கும் முயற்சியே வாசல் பதிப்பகம் வெளியிடப்பட்டுள்ள ‘நாய்வால் - சங்கிலிக் கதைகளும் ஓசைக் கதைகளும்’, ‘சுண்டெலி முதலைக் கதைகள்’ ஆகிய நூல்கள்.

   இந்த நூல்களில் இருக்கும் கதைகள் எல்லாம் குழந்தைகளுக்கானது. அதற்காக இந்தப் புத்தகத்தை அவர்கள் கையில் கொடுத்து “படி படி” என அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. 3 முதல் 7 வயதுவரை உள்ள குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் படித்து இதில் வருவதுபோன்றே சத்தம் எழுப்பி, நடித்துக்காட்டிச் சொல்ல வேண்டிய கதைகளையே இந்த நூல்களில் உள்ளவை. தமிழில் இதுவொரு புதிய முயற்சியாகும். ஆம், வீட்டுக் கல்விமுறை என்ற ஹோம் ஸ்கூலிங் முறையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன இந்த நூல்கள். வீட்டுக் கல்விமுறை என்பது பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பாமல் வீட்டிலேயே பெற்றோரோ ஆசிரியரோ வந்து பாடம் சொல்லிக்கொடுக்கும்முறை. இது அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளில் மட்டுமே இன்றுவரை பிரபலமாக உள்ளது. விரைவில் நம்ம ஊருக்கும் வந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick