கணித மேதை சகுந்தலா தேவி! - பிறந்த தினம்: நவம்பர் 4

த.சூர்யகுமார்

னிதக்கணினி என்று அழைக்கப் பட்டவர், இந்தியக் கணித மேதை சகுந்தலா தேவி. 1929 நவம்பர் மாதம் 4-ம் தேதி பெங்களூருவில் பிறந்தார். மூன்று வயது இருக்கும்போது, அப்பாவுடன் சீட்டுக்கட்டை வைத்து வித்தைகள் செய்வார். அப்போதே அவருடைய கணித அறிவு அப்பாவுக்குத் தெரிந்தது. இவருடைய கணித ஆற்றலைக் கண்டுகொண்ட அப்பா, ‘பிராமணர் சர்க்கஸ்’ நிறுவனத்தில் தான் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மகளின் கணிதத் திறமையை நிகழ்ச்சிகளாகச் செய்துகாட்ட ஆரம்பித்தார்.

பள்ளிக்குச் செல்லாமலே பல்கலையில் ‘கில்லி’யானார் சகுந்தலா தேவி ஆறு வயதில், மைசூர் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கணித மற்றும் நினைவாற்றல் திறமையை நிரூபித்துக் காட்டினார். பிறகு, எட்டு வயதில் தன் திறமையை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நிரூபித்துக் காட்டினார். தனது கணித ஆற்றலை நிரூபிக்க, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick