கெட்ட பூனை கிட்டி

கிங் விஸ்வா

வலைகளிலிருந்து உருவான ஜாலியான புத்தகம் – பேட் கிட்டி.

‘பேட் கிட்டி’ என்றழைக்கப்படும் நமது நாயகிக்கு எப்படி இந்தப் பெயர் உருவானது என்பதுதான் முதல் கதை. பள்ளியில் படிக்கும் நம் ஹீரோயின் பேட் கிட்டி ஒரு வீட்டில் வசிக்கிறது. டாம் & ஜெர்ரி தொடரில் வருவதைப்போல, அந்த வீட்டில் இருப்பவர்களின் முகத்தைக் காட்டாமல், அவர்களின் கால்களை மட்டும் வரைகிறார் ஓவியர் நிக். கதையின் ஆரம்பத்தில் வெறும் கிட்டியாக இருந்தது, எப்படி பேட் கிட்டியாக மாறியது என்பதுதான் முதல் கதை.

பத்து வயதுக்குள் இருக்கும் சில சிறுவர்களைப் போல கிட்டிக்கும் காய்கறிகளைச் சுத்தமாகப் பிடிக்காது. ஒருநாள் காலையில் கிட்டியிடம் காய்கறிகளைக் கட்டாயமாகச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். வேண்டா வெறுப்பாகக் காய்கறிகளைச் சாப்பிட்ட கிட்டிக்குப் பயங்கரமாகக் கோபம் வருகிறது. எல்லோரும் வீட்டைவிட்டுச் சென்ற பிறகு, வீட்டையே அலர அடிக்கிறது கிட்டி.

வீட்டுக்குத் திரும்பும் பெரியவர்கள், வீடு அலங்கோலமாக இருப்பதைக்கண்டு கோபப்படுகிறார்கள். இதனால்தான் கிட்டிக்கு, `பேட் கிட்டி’ (Bad Kitty) என்ற பெயரும் வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick