ஓங்கி நின்ற ஒதிய மரம்! - சிறுகதை | Short Story - Chutti Vikatan | சுட்டி விகடன்

ஓங்கி நின்ற ஒதிய மரம்! - சிறுகதை

லதா ரகுநாதன், லலிதா

ருடங்கள் பல கடந்தும் தெம்போடு அங்கே நின்றுகொண்டிருந்த ஒதிய மரத்துக்கு ஆச்சரியம். இதுநாள் வரை வெட்டவெளியில் தனி மரமாக நின்று பேச்சுத் துணைக்கு யாருமின்றி ஏங்கி அழுதுள்ளது. சுற்று வெளியில் ஒரு பூச்சி நடமாட்டம் இருந்ததில்லை. புற்கள்கூட முளைக்காமல் பொட்டல்வெளியாக இருக்கும் பூமி. தனிமை இவ்வளவு வருடங்களாக அதற்குப் பழகிவிட்டது. இன்றோ, அதிசயமான பேச்சொலிகள் கேட்டது. தன் இலைகளைச் சிலுப்பிக்கொண்டு பார்த்தது. அந்த இடத்தில் சில மனிதர்கள் நின்றிருந்தார்கள். அதில் ஒருவரின் குரல்தான் கம்பீரமாக ஒலித்தது.

‘யார் இவர்? எல்லோருக்கும் தலைவர்போல தோன்றுகிறது. கைகளில் நிழலுக்குக் குடையைப் பிடித்திருக்கிறார். அவர் அமர்வதற்காக நாற்காலி போடப்பட்டுள்ளது. அட... அந்த நாற்காலியும் என் நிழலின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. என்ன சொல்லப்போகிறார்?’ என ஆர்வத்துடன் கவனித்தது ஒதிய மரம்.

“எல்லோரும் கேட்டுக்குங்க. இந்த இடத்தில் மாவட்டத்திலேயே பெரிய பூங்காவை அமைக்கப்போறோம். பெரிய அளவில் திறப்பு விழா நடக்கப்போகுது. பெரிய பெரிய ஆள்கள் வரப்போறாங்க. அதனால், வேலைகள் வேகம் வேகமா நடக்கணும். புதர்களை வெட்டி மண் தட்டிப்போடுங்க. பாத்தி கட்டி, எல்லா வகையான செடிகளையும் வைக்கணும்” என்றவர், இன்னும் பல வேலைகளை அடுக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick