வேதாளம் புதிது! 2.0

கதை, படம்: வி.எம்.ராஜா

முன் கதை சுருக்கம்:

ரொம்ப ரொம்பப் பழைய காலத்திலே விக்கிரமாதித்தன் என்ற அரசனை கேள்வி கேட்டே வறுத்தெடுத்த ஒரு பயங்கரப் பேய், வேதாளம்.  விக்கிரமாதித்தனை நொந்து நூடுல்ஸாக்கிய வேதாளத்துக்கு, வேதாள உலகிலே பயங்கர தண்டனை கொடுக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிக்கணும்னா, இந்தப் பிறவியில் விக்கிரமாதித்தனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்கு எடுபுடி பண்ணி, குட் சர்டிஃபிகேட் வாங்கி வந்தால், விடுதலை. இல்லைன்னா, ரெண்டாயிரம் வருடம் கொதிக்கிற எண்ணெய்ச் சட்டியில் குளிக்கணும்.   இந்தப் பிறவியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த விக்ரமை வேதாளம் கண்டுபிடித்து விவரங்களைச் சொல்லி, எடுபுடியானது. விக்ரம் கண்ணுக்கு மட்டும்தான்  வேதாளம் தெரியும். அதுவும் ஒரு பாப்பா தோற்றத்தில்! (உண்மையான உருவத்தை நீங்கள் பார்ப்பீங்க.) 

இருவரும் சேர்ந்து செய்யும் சாகச அட்டகாசங்களை இனி பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick