டெக் பிட்ஸ்

ர.சீனிவாசன்

ஒயாஸிஸ் கிண்டில்!

கிண்டில் வகை கேட்ஜெட்கள் தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. நான்கு ஸ்கூல் புத்தகங்களைத் தூக்கிச்செல்லவே மிகவும் சிரமப்படுகிறோம். இதில் எங்கே தனிப்பட்ட வளர்ச்சிக்காகப் புத்தகங்கள் படிப்பது என்று புலம்புபவர்களுக்கு, இது ஓர் அற்புத டூல். அமேஸான் நிறுவனம் அறிமுகப் படுத்தியிருக்கும் இந்த கிண்டில், 8GB மற்றும் 32GB மெமரியில் கிடைக்கிறது. இதன் 7 இன்ச் டிஸ்ப்ளே, குறைந்த எடை, புத்தகத்தைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்படுத்தும் தொழில்நுட்பம் என அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த கிண்டில் வாட்டர்ப்ரூஃப் என்பதால், எங்கே வேண்டுமானாலும் படிக்கலாம். ஆயிரமாயிரம் புத்தகங்களை ஆங்கிலம், தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாளம்  ஆகிய மொழிகளில் அடுக்கிக்கொள்ளலாம். எந்தப் புத்தகம், எப்போது வேண்டுமோ, அப்போது படித்துக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick