வணக்கம் சுட்டி நண்பர்களே...

தினமும் சந்திக்கும் நண்பன் என்றாலும், பிறந்தநாளில் அவனைச் சந்திக்கும்போது கூடுதல் உற்சாகம் இருக்கும் அல்லவா? ஒருவருக்கு ஒருவர் மகிழ்வைப் பரிமாறி உற்சாகத்தின் உச்சத்துக்குச் செல்வோம் அல்லவா? இதோ, உங்கள் நண்பன் சுட்டி விகடன், 19-வது பிறந்தநாளில் உங்களைச் சந்திக்கிறான். தனது உற்சாகத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ளப் புதிய புதிய பகுதிகளுடன், பக்கத்துக்குப் பக்கம் பொலிவுடன் வந்திருக்கிறான். ஜீபாவாகிய நானும்  என்னுடன் கூடவே சின்னுவும் மின்னுவும் உங்களுடன் பயணிக்க இருக்கிறோம். நாங்கள் மேலும் சில நண்பர்களையும் அழைத்து வந்திருக்கிறோம். இனி, அவர்கள் ஒவ்வோர் இதழிலும் உங்களைச் சந்தித்து குஷிப்படுத்துவார்கள். நொர்ணி - நரிஜி, விக்கிரம் - வேதாள் என்ற இந்த நண்பர்கள், ஏற்கெனவே பல வருடங்களுக்கு முன்பு, இதே சுட்டி விகடனில் பட்டையைக் கிளப்பியவர்கள்தான். இப்போது, உங்களுக்காகப் புதிய வெர்ஷனில், புதிய கதைகளுடன் அசத்தப்போகிறார்கள். இத்துடன் சுட்டி க்ரியேஷனாக அட்வெஞ்சர் ஜீப் என இந்த ஸ்பெஷல் உங்களுக்கு செம ட்ரீட்டுதான்..!

இவை மட்டுமா? புத்தகத்தோடு நம் தொடர்பு முடியப்போவதில்லை. நேரிலும் சந்திக்கப்போகிறோம். உங்கள் அறிவுக்கும் தனித்திறமைகளுக்கும் மேடை அமைக்கும் வகையில், பல்வேறு கலகல நிகழ்ச்சிகளுடன் உங்கள் ஊரில், உங்கள் பள்ளியில் சந்திக்கப்போகிறோம். அதுபற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வரும். எல்லா நாளும் திருவிழா என்பதுபோல, இனி நிறைய உற்சாகமான விஷயங்கள் புத்தகத்திலும் புத்தகத்துக்கு வெளியிலும் உங்களுக்கு அளிக்க, இந்த பர்த் டே பேபி பல திட்டங்களை வைத்திருக்கிறான்.

ஃப்ரெண்ட்ஸ்...

ஆர் யூ ரெடி?

அன்புடன்

ஜீபா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick