பேட்மின்டன் புயல்!

மு.பிரதீப்கிருஷ்ணா

லிம்பிக் வரலாற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தவர் பி.வி.சிந்து. அதுமட்டுமல்ல, ஒலிம்பிக்கில் இளம் வயதில் பதக்கம் வென்ற இந்தியப் பெண்ணும் இவர்தான். 22 வயதுதான் ஆகிறது. ஆனால், எண்ணற்ற சாதனைகள். இன்று பலகோடிப் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன். இந்த வெற்றிகளுக்குக் காரணம் சிறுவயதில் இருந்தே சிந்துவுக்குள் இருந்த விடாமுயற்சியும்பெர்ஃபெக்‌ஷனும்தான்.

1995-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார் சிந்து. அவரது அப்பா பி.வி.ரமணா, அம்மா விஜயா இருவரும் வாலிபால் பிளேயர்கள். ரமணா, அர்ஜுனா விருது வாங்கியவர். அக்கா திவ்யா ஹேண்ட்பால் பிளேயர். இப்படி விளையாட்டுக் குடும்பத்தில் பிறந்த சிந்து இன்று ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஆனதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இவர் தேர்ந்தெடுத்தது வாலிபால் அல்ல. பேட்மின்டன். ஆறு வயதிலேயே பேட்மின்டன் ராக்கெட்டைக் கையில் பிடிக்கத் தொடங்கினார். விளைவு, தன் தந்தை பல ஆண்டுகள் கழித்து வாங்கிய அர்ஜுனா விருதை, 19 வயதிலேயே பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்காட்லாந்தில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. பெண்கள் பிரிவு ஃபைனலில் சிந்துவும் ஜப்பானின் நசோமியும் மோதினார்கள். ஒவ்வொரு செட்டும் கடைசி வரை இழுபறியாகவே நீடித்தது.

110 நிமிடங்கள். பேட்மின்டன் வரலாற்றின் இரண்டாவது நீண்ட நேரம் நடைபெற்ற போட்டி இது. ஆனால் முடிவில் சிந்து தோல்வியைத் தழுவுகிறார். இப்போட்டியை நேரில் பார்த்த சாய்னா நேவால், கோபிசந்திடம், “இந்தப் போட்டியைப் பார்த்ததிலேயே என் எனர்ஜியை முழுவதுமாய் இழந்துவிட்டேன். அவ்வளவு சிறப்பாகச் சிந்து விடாமல் போராடினார்” என்று சிந்துவைப் பாராட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick