பற்களின் வரலாறு!

சோ.மோகனா

ம் முகத்துக்கு அழகு தருவது எது? நிச்சயமாகப் புன்னகைதான். ஒவ்வொரு புன்னகையும், விலை மதிப்பற்றது. அழகாகச் சிரிக்கும் முகம்தான் எல்லோராலும் நினைவு கூறப்படும். 5 மாதக் குழந்தைகூட, நீங்கள் சிரித்துக்கொண்டிருந்தால் மட்டுமே, உங்களை நினைவில் வைத்துக்கொள்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
    
பல்லுக்கு வயது 530 மில்லியன் ஆண்டுகள்

 பல் உருவானது உணவை அரைத்து விழுங்கவும் உங்களின் சீரணத்தை எளிமைப்படுத்தவும்தான். ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு வகை பல் இருக்கிறது. அவை பரிணாமத்தில் பல்வேறு காலகட்டத்தில் உருவானவை.  பல் உருவானது முதன்முதலில் முதுகெலும்பிகளுக்குத்தான், அதுவும், மீன்களுக்குத்தான். பற்கள் இருக்க வேண்டுமென்றால் தாடை இருக்க வேண்டுமல்லவா? ஆனால் தொடக்கத்தில் தாடையில்லா மீன்களும் இருந்தன. காலப்போக்கில் மீன்களுக்குத் தாடை வந்தது. அதில்தான், பற்கள் என்ற அமைப்பு சுமார் 530 மில்லியன் ஆண்டுகளுக்குமுன், கேம்பிரியன் (Cambrian Period) காலத்தில் உருவாகிப் பரிணமித்தது. ஆனால் இந்த பல்லைப் பளபளவென்று மினுக்க வைத்துக் கொண்டிருக்கும் எனாமல் பகுதி, சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்குமுன், மீனின் செதிலிலிருந்துதான் உருவானது. நம் உடலில் உள்ள  மிகப்பலமான பொருள் எனாமல்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick