மூவேந்தரின் கொடி!

“யாதும் ஊரே யாவரும் கேளீர்...” என்ற  ஒற்றை வரியே தமிழ்ச் சமூகம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உயிரென போற்றி வாழ்ந்த சமூகம் என்பதை எளிதில் உணர்த்திவிடுகிறது.

தனக்குக் கிடைத்த வாழ்நாளை நீட்டிக்கும் நெல்லிக்கனியை ஔவைக்குக் கொடுத்தால் தமிழ் வாழும் என்று நினைத்த அதியமான், குளிரில் நடுங்கும் மயிலின் துயர்கண்டு தன் போர்வையைக்கொடுத்த பேகன், தேர்க்காலில் பட்டு நைந்துவிடுமோ என்றெண்ணித் தன் தேரையே முல்லைக்கொடிக்காக விட்டுச்சென்ற பாரி, கடல் பல கடந்து படை பல நடத்திப் பல தேசங்களை வென்று உலகின் மிகப்பெரிய பேரரசை நிறுவிய சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆகியோர் அறத்தின்வழி நின்ற தமிழர்களின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய முன்னோர்கள் ஆவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick