தெருக்கூத்து!

“நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்ற கவிமணியின் கூற்றிற்கேற்ப மக்களின் கண்ணை, செவியை, கருத்தைக்கவரும் வகையில் நாடகங்கள் கதையழகோடு கவிதையழகும் கொண்டு அமைதல் வேண்டும். அம்மா அந்நாடகக்கலையை நம் வகுப்பறையில் அரங்கேற்ற முடியுமா என்றால் மற்றொரு மாணவி. ஏன் முடியாது? என்று கூறி எம் பள்ளியின் பூங்காவுக்கு அழைத்துச் சென்றேன். வட்டமிட்டு அமர்ந்தோம். இயற்கையும் சாதகமாகிவிட்டது ஒப்பனை இல்லாமல் உடை அலங்காரம் இல்லாமலே தெருக்கூத்தினை உருவாக்கப்போகிறோம் என்றவுடன் மாணவ மாணவியர் புத்துணர்வு கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick