டாப்ளர் விளைவு! | FA pages - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/10/2017)

டாப்ளர் விளைவு!

டாப்ளர் விளைவை மெய்ப்பிக்க நாங்கள் விளையாட்டுப் பொருளாகப் பயன்படுத்தும் பொருட்களைக்கொண்டு உருவாக்கிய மாதிரிதான் இது. ஜெம்ஸ் பிளாஸ்டிக் பந்து ஒன்று எடுத்துக்கொண்டோம் அதை இரண்டாகப் பிரித்து அதனுள் ஒலி எழுப்பப் பொம்மைப் போனில் உள்ள ஒலி பெருக்கியை எடுத்து பந்தின் ஒரு பாதியில் ஒட்டிவிட்டோம். பின்பு பந்தில் ஆங்காங்கே ஒரு சில துளைகள் இட்டோம். ஏனெனில் மூடிய பகுதியில் ஒலியானது கடத்தப்படாது. துளைகள் இட்டபின் பந்தின் இரு முனைகளிலும் இரண்டு பெரிய துளைகள் இட்டுக் கயிற்றால் இணைத்தோம், ஒலிப்பானை இயக்கி ஒரு முனையில் இணைக்கப்பட்ட கயிற்றின்மூலம் தலைக்குமேல் சுழற்றினோம்.