தேனீ வளர்ப்பு! | FA pages - Chutti Vikatan | சுட்டி விகடன்

தேனீ வளர்ப்பு!

தேனீ வளர்ப்பு பற்றியும் தேனின் பயன்கள் பற்றியும் களப்பயணமாக மாணவர்ளை நேரில் அழைத்துச் சென்று விளக்கப்பட்டது. மூன்று வகை தேனீக்கள் இராணித்தேனீ, ஆண்தேனீ, வேலைக்காரத் தேனீ. இராணித்தேனீ 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை உடையது. இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால், மலரின் குளுக்கோஸ் வேதியியல் மாற்றத்துக்கு உட்பட்டு, தேனாக மாறுகிறது. தேனீக்களின் வாழ்க்கை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி போன்றவற்றை நமக்கு எடுத்துரைக்கிறது. தேனீக்கள் மலர்களிடையே மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகிறது. தேனீயிலிருந்து கிடைக்கும் தேன் ஊட்டச்சத்து மிகுந்தது. 1 கிலோ தேன் 3200 கலோரி சக்தியைத் தரும். இருமல், சளி, குடற்புண் போன்றவற்றைக் குணமாக்குகிறது. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க தேன் பயன்படுகிறது. தேனடைகள் மாணவர்களுக்குக் காட்டி மேலும் விளக்கியது அவர்களை உற்சாகமூட்டியது.

- வளர்மதி,
அரசு உயர்நிலைப்பள்ளி,
முணார், திருநெல்வேலி.


படம்: எல்.ராஜேந்திரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick