பாஸ்தா சாப்பிடும் பூனையார்!

கிங் விஸ்வா

ரம்பத்தில் பல பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட ஒரு காமிக்ஸ் தொடர்தான் இன்று உலகிலேயே மிக அதிகமான பத்திரிகைகளில் வெளியாகும் காமிக்ஸ் தொடர் என்ற கின்னஸ் சாதனையைச் செய்துள்ளது. அந்த ஆரம்பகால நிராகரிப்புகளிலிருந்த ஒரு விஷயத்தை நாம் அனைவருமே வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். அது என்ன என்பதைக் கட்டுரையின் முடிவில் காண்போம்.

யார் இந்த கார்ஃபீல்டு:
உலகிலேயே மிகப்பெரிய சோம்பேறி யார் என்ற கேள்விக்குப் பதில்தான் கார்ஃபீல்டு என்ற நம்ம ஹீரோ. இவர் ஒரு பூனை. பூனை என்றால் சாதாரணப் பூனையல்ல, கொழுக் மொழுக்கென்று இருக்கும் தொப்புக்குட்டிப் பூனை. கார்ஃபீல்டு பிறந்ததே ஓர் இத்தாலியன் ரெஸ்ட்ரான்ட்டில்தான். லசான்னே என்ற `பாஸ்தா’வின் சுவையை நுகர்ந்துகொண்டே பிறந்ததால் இந்த லசான்னே கார்ஃபீல்டின் விருப்பமான உணவாகிவிட்டது. கார்ஃபீல்டு வளரவளர இன்னொரு பிரச்சனையும் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் கார்ஃபீல்டுக்கு உணவளிக்க  முடியாமல், குறிப்பாக, அந்த பாஸ்தாவைக் கொடுத்துக் கட்டுபடியாகாமல், அந்த ரெஸ்ட்ரான்டையே மூட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது அந்த ரெஸ்ட்ரான்ட் அதிபர் கார்ஃபீல்டை ஒரு பிராணிகள் வளர்ப்புக் கடைக்கு விற்றுவிடுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick