வெள்ளி நிலம் - 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜெயமோகன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறும்போது கிடைக்கும் மம்மி ஒன்றைக் கடத்திச்செல்ல சிலர் முயல்கிறார்கள். அதைத் துப்புதுலக்க வரும் காவல்துறை அதிகாரி பாண்டியனுடன் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் சேர்ந்து விசாரணைக்காக பூட்டான் செல்கிறார்கள். பல இன்னல்களைக் கடந்து, திபெத்திய பௌத்த ஞானி மிலரேபா குகைக்குப் போகிறார்கள். அங்கும் எதிரிகள் துரத்தி வரவே  அவர்களிடமிருந்து தப்பித்து ஹெலிகாப்டரின்மூலம் காட்மாண்டுவுக்கு வருகிறார்கள். அதே நேரம் லடாக்கில் இவர்கள் வேண்டுமென்றே தப்பவிட்டு வந்த சீன உளவாளி, சீனாவுக்கு அனுப்பிய ஏழு வரி ரகசியச் செய்தியை வழிமறித்து, பதிவுசெய்து அனுப்புகிறார்கள் நம் அதிகாரிகள். அதை டீகோட் செய்யும் முயற்சியில் பெருமளவு வெற்றிபெறுகிறார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். அதில் கிடைத்த தகவலின்படி திபெத்திலிருக்கும் ஜாக்கோங் மடாலயம் செல்லத் தயாராகிறார்கள்... 

 ‘ஜாக்கோங் மடாலயம்’ , அதுவரை அவர்கள் பார்த்த மடாலயங்களிலேயே மிகப்பெரியது. அதை, ஒரு மடாலயம் என்றே அவனால் எண்ணமுடியவில்லை. அது, ஏராளமான கட்டடங்கள்கொண்ட மாபெரும் வளாகம். அவர்கள், மடாலயத்தின் முகப்பிலிருந்த ‘பார்க்கோர்’ என்னும் மிகப்பெரிய சதுக்கத்தை அடைந்தனர். அங்கிருந்து பார்த்தபோது, ‘U’ எழுத்தின் வடிவில் அமைந்த மடாலயம் தெரிந்தது. அதன் கூரை முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தது.அதன் பின்பக்கம் அலையலையாக எழுந்து நின்ற பனிமலைக்குக்கீழே, இன்னொரு சிறிய பனிமலைபோலத் தோன்றியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick