ஹர்திக் ஆகிய நான்..! - பாண்டியாவின் வெற்றிப் படிகள்

மு.பிரதீப்கிருஷ்ணா

“என்மீது எனக்கு 200 சதவீதம் நம்பிக்கை உள்ளது. என்னால் என்னை வளர்த்துக்கொள்ள முடியும்” என்று பயிற்சியாளர்கள் முன் நம்பிக்கையோடு அந்தச் சிறுவன் நின்றான். அவன் கொண்டிருந்த நம்பிக்கையை அளவுகோல்கொண்டு அளந்திட முடியாது. அவ்வளவு நம்பிக்கை. எந்த வசதியும் இல்லாதபோதே, இந்த விளையாட்டு தனக்குப் பிடித்த கார்கள் வாங்க வழிசெய்யும் என்று கனவு காணுமளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான், இன்று அந்தச் சிறுவனை இந்தியாவின் நம்பிக்கையாக மாற்றியுள்ளது. “கஷ்டங்கள் இல்லாமல் எப்படி நீங்கள் வாழ்கையை அனுபவிக்க முடியும்?” என்று பாஸிட்டிவாக கஷ்டங்களைக் கடந்து பயணித்தான். அந்தச் சிறுவன். இந்திய கிரிக்கெட் தற்போதைய சென்சேஷன் ஹர்திக் பாண்டியா!

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை டார்கெட் செய்ய கோலி பயன்படுத்திய ஆயுதம், ஹர்திக் பாண்டியா. கோலியின் நம்பிக்கையை வீணாக்காமல் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் கலக்கி, தொடர் நாயகன் விருதைப்பெற்றார் பாண்டியா. இந்த வெற்றிகள், சுலபத்தில் அவருக்குக் கிடைத்ததல்ல...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick