கண்டக்டர் அண்ணே! - சிறுகதை

ஓவியம்: ரமணன்

‘‘என்னண்ணே கிளம்பலாமா?’’ என்றபடி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார் ரவி.

‘`ம்...ம்... போகலாம்’’ என்றார் மணி.

‘`என்னண்ணஆ டல்லா இருக்கீங்க?’’ எனக் கேட்டார் ரவி.

‘`ராத்திரி சரியா தூக்கமில்லே ரவி. காலையில் எழுந்ததிலிருந்து ஒரே தலைவலியா இருக்கு. போன் பண்ணி லீவு கேட்டதுக்கு, ‘வேற ஆளு இல்லே வா’னு சொல்லிட்டாங்க. நேரமாக நேரமாகத் தலைவலி அதிகமா இருக்கு. இனி, பாசஞ்சர்ஸோடு போராடணும். அதிலும், ஸ்கூல் பசங்களை நினைச்சாலே தலை வெடிச்சுடும்போல இருக்கு’’ என்றார் மணி எரிச்சலோடு.

‘`டிக்கெட் கொடுக்கிற வேலையை மட்டும் பாருங்கண்ணே. பசங்க என்னமோ செஞ்சுட்டுப் போகட்டும்... எப்படியோ தொங்கிட்டு வரட்டும். நீங்க வாயே கொடுக்காதீங்க. ரொம்ப ஓவரா போனாங்கன்னா நான் பேசிக்கிறேன்’’ என்றபடி பேருந்தைப் பணிமனையிலிருந்து கிளப்பினார் ரவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick