செரித்தல் மண்டலம் பேசுதல்! | FA pages - Chutti Vikatan | சுட்டி விகடன்

செரித்தல் மண்டலம் பேசுதல்!

மனித உடல் பாடத்துக்கு உரியதுபடம்: ரா.திலிப்குமார்

னிதனின் செரித்தல் மண்டலத்தைப் பற்றி மாணவர்களிடம் தெளிவாகக் கூறிய பின்பு, தொடுதிரையில் செரித்தல் மண்டலத்தின் செயல்களை வீடியோக் காட்சிகளாக விளக்கினேன். பின்பு ஆறு மாணவர்கள், செரித்தல் மண்டலத்தில் உள்ள வாய், உணவுக்குழல், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, கணையம், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், ஆசனவாய் பற்றி நாடகமாக நடித்துக்காட்டினர். மற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். பிறகு, மாணவர்களிடம் வீட்டில் உள்ள எளிய பொருள்கள்மூலம், செரித்தல் மண்டலம் மாதிரியைச் செய்துவரச் சொன்னேன். மறுநாள் ராகவி மற்றும் ஜெயஸ்ரீ அருமையாக செரித்தல் மண்டலம் மாதிரிகளைச் செய்து வந்தனர். மற்ற மாணவர்களும் பார்த்து, தாங்களும் செய்து வர ஆர்வம் கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick