எஃப்.ஏ. புராஜெக்ட் போட்டி!

சுட்டிவிகடன் எஃப்.ஏ பக்கங்களில், ஆசிரியர்களின் படைப்புகளைப் படித்து வந்திருப்பீர்கள். மாணவர்களுக்கு இது போட்டிக்கான தருணம். மாணவ நண்பர்களே... முதல் பருவத்தில், உங்கள் கற்பனையில் உதித்த செயல்திட்டங்களை (PROJECTS) ஆசிரியரின் உதவியுடன் தரமான புகைப்படங்களாக எடுங்கள். அந்த புராஜெக்ட்டின் செய்முறை விளக்கத்தையும் எழுதி, எங்களுக்கு அனுப்புங்கள். கூடவே, உங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பள்ளியின் பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகிய விவரங்களைத் தவறாமல் குறிப்பிட்டு அனுப்புங்கள். ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் சிறந்த செயல் திட்டங்களை அனுப்பிவைக்கலாம். குழுவாகவும் சேர்ந்து புராஜெக்ட்களைச் செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் செயல்திட்டங்களுக்குப் பரிசாகச் சான்றிதழும், பள்ளி நூலகத்துக்குப் புத்தகங்களும் பரிசாக வழங்கப்படும். உங்கள் செயல்திட்டங்கள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 20.9.2017

போட்டிக்கான நிபந்தனைகள்...

* புராஜெக்ட்டின் செய்முறை விளக்கம் ஏ4 தாளில் இரண்டு பக்கத்துக்குள் இருக்க வேண்டும். அதற்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

* இந்த விளக்கங்களை பிரசுரத்துக்குத் தகுந்தவாறு சில மாற்றங்களைச் செய்ய சுட்டிவிகடன் குழுவுக்கு அதிகாரம் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick