சுட்டிகளை மிரட்டும் கோமாளிப் பேய்!

கார்த்தி

மக்கு வெளிச்சத்தில் என்னென்ன பொருள் தெரியுமோ, அதேதான் இருட்டாக இருக்கும் போதும் இருக்கும். ஆனால், வீட்டில் கரன்ட் போனால், ஏன் பக்கத்து ரூமுக்குச் செல்லவே பயப்படுகிறோம். பேய் இருக்குமோ என்ற  பயம்தான் காரணம். எவற்றையெல்லாம் பார்த்து பயந்தோமோ அவையெல்லாம் கனவில் பேய் போல் வந்து இன்னும் நம்மை பயமுறுத்தும். அப்படி பயமுறுத்துவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதுதான் IT திரைப்படம்.

டெர்பியில் இருக்கும் பென்னிவைஸ் என்னும் பேய் 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி, அங்கு இருக்கும் மக்களைக் கொல்கிறது.  மக்கள் தங்கள் உறவினர்கள் காணாமல் போகிறார்கள் என நினைத்து போஸ்டர் ஒட்ட, பென்னிவைஸோ அவர்களை ஒரு பாதாளச் சாக்கடையில் அடைத்து வைத்திருக்கிறான். இதற்கு முன்னர் டெர்பியில் பலரைக் கொன்ற பென்னிவைஸின் தற்போதைய டார்கெட் சிறுவர்கள். சிறுவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும் பென்னிவைஸ், அவர்கள் பயப்படும் பொருளாக உருமாறி அவர்களை பயமுறுத்திக் கொல்லும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick