குச்சி குச்சி ராக்கம்மா!

கிங் விஸ்வா

ந்தக் காலத்துப் பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்னையே, குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான். விளையாட்டு, வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன் என்று பலவற்றில் ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு, சாப்பிட மட்டும் பிடிக்காமல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் ஒரு காமெடியான கதையைச் சொல்லி, அந்தக் கதைக்காக வீடியோ கேம், ஆன்லைன் விளையாட்டு என்று பலவற்றை இணைத்து, கதையின் உள்ளேயே ஒரு உணவுப் பொருளைப் பற்றியும் சொல்லிவந்து, காய்கறிகளின் பெருமையைப் பற்றிய விஷயங்களைச் சொல்வதுபோல ஒரு புத்தகம் இருந்தால், எப்படி இருக்கும்? அதைத்தான் சாதித்திருக்கிறார், அமெரிக்க எழுத்தாளர் டாம் வாட்ஸன்.

ஸ்டிக் டாக்:

புத்தகத்தின் அட்டையிலேயே, மோசமான படங்களுடன் ஒரு நல்ல கதை என்று சொல்லி, தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார், கதாசிரியர் டாம். கதையின் முதல் அத்தியாயத்திலேயே, இந்தக் கதைத் தொடருக்கு ஏன் ஸ்டிக் டாக் என்று பெயர் வைத்தார் என்பதை ஜாலியாக விளக்குகிறார். ஓவியம் வரையத் தெரியாதவர்கள், மனிதர்களை வரைய முயலும்போது என்ன செய்வார்கள்... குச்சி போல கோடு ஒன்றைப் போட்டு, அதன்மீது உருண்டையாக, பந்துபோல தலையை வரைவார்கள். அதைக் குச்சி ஓவியம் என்று சொல்வார்கள். நம் கதாசிரியர் டாமுக்கும் ஓவியம் வரையத் தெரியாது. ஆகவே, அவர் தன்னுடைய நாய்களைக் குச்சிகளாக (ஸ்டிக்) வரைகிறார். அதனால்தான் இந்தத் தொடருக்கு ‘ஸ்டிக் டாக்’ என்று பெயர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick