எரி நட்சத்திர மழை!

ர.சீனிவாசன்

குட்டி பிரசன்னாவுக்கு அன்று பிறந்தநாள். 7 வயதைத் தொட்டிருந்தான். அந்த மலைப்பிரதேசத்தில், நிலவொளியில் தன் அக்கா, அம்மா அப்பாவுடன் படகுச் சவாரி செய்துகொண்டிருந்தான். அப்போது வானில் மிக அதிக அளவில் எரிநட்சத்திரங்கள் மழையாய்ப் பெய்யத் தொடங்கின.

“அப்பா! அங்க வானத்துல என்ன?” என்று ஆச்சர்யத்துடன் தன் குட்டி விரலை அந்த இரவு வானை நோக்கி நீட்டினான் பிரசன்னா.

“சொல்றேன் வா!” என்று படகில் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தவனைப் பிடித்து மடியில் உட்கார வைத்த அப்பா, பொறுமையாக விளக்கத் தொடங்கினார்.

“அதுதான் எரிநட்சத்திரங்களின் மழை. இது ஒரு வானியல் நிகழ்வு. வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில், வானில் இதுபோல நிறைய எரிநட்சத்திரங்களைப் பார்க்க முடியும்.”

“அது எப்படிப்பா உருவாகுது?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் அக்கா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick