பட்டுச்சட்டை போட்ட பூச்சி!

ஓவியம்: ரமணன்

ந்த அடர்ந்த காட்டுல திருவிழாவுக்கு ஏற்பாடு நடந்துச்சு. சிங்கராஜாவுக்குக் குட்டிகள் பிறந்ததை முன்னிட்டு நடக்கப்போகும் பெரிய்ய்ய்ய திருவிழா அது. ஆடல் பாடல், பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு நடக்கப்போகும் திருவிழான்னா சும்மாவா? எல்லா விலங்குகளும் ரொம்ப குஷியாகிடுச்சு. ‘மத்தவங்களைவிட நாம அழகா தெரியணும், அசத்தலா பெர்பாமன்ஸ் செய்யணும்னு பயங்கரமா பிளான் போட ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்காக விதவிதமா புதுப் புது டிரெஸ்களுக்கு தையல்காரரான தூக்கணாங்குருவிகிட்டே ஆர்டர் குவிய ஆரம்பிச்சது.

அதே காட்டின் மரத்தில் ஒரு குட்டிப் புழுவும் இருந்துச்சு. அதுக்கு அப்பா அம்மா இல்லே. அதனால, புதுத் துணியை வாங்கிக் கொடுக்கவும் ஆளில்லை. இருந்த பழைய டிரெஸ் ஆங்காங்கே கிழிஞ்சிருந்துச்சு. மத்த எல்லா விலங்குக் குட்டிகளும் புழுவைப் பார்த்து கிண்டல் பண்ணுச்சுங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick