கத்திச் சண்டை | Young Sword fighting champion from Salem - Chutti Vikatan | சுட்டி விகடன்

கத்திச் சண்டை

பரணிகுமார், படம்: எம்.விஜயகுமார்

ராஜா காலத்து சினிமாக்கள் என்றால், எல்லோருக்கும் பிடிக்கும். காரணம், பாய்ந்துசெல்லும் குதிரைகள், ‘ஜிலீர் ஜிலீர்’ என மோதிக்கொள்ளும் வாள்கள் எனப் பார்க்கவே விறுவிறுப்பாக இருக்கும். அன்று வீரத்தின் அடையாளமாக இருந்த வாட்சண்டை, இப்போது விளையாட்டுகளில் ஒன்றாகியிருக்கிறது. இந்த வாட்சண்டை விளையாட்டில், தேசிய அளவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார், சேலத்தைச் சேர்ந்த நவீன் பாபு.

‘‘நான் குகை மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். என் அப்பா ஒரு நெசவுத் தொழிலாளி. அம்மா, அண்ணன், தங்கை என அழகான குடும்பம். என்கூட படிக்கிற நண்பர்கள் சிலர் வாள் சண்டையில் விளையாட்டுல கலந்துக்கிட்டு இந்தியா முழுக்க சுத்துவாங்க. நிறைய பரிசுகளோடு வந்து பெருமையோடு பேசுவாங்க. அதைப் பார்த்துதான் எனக்கும் அந்த விளையாட்டு மேலே ஆசை வந்துச்சு. சேலத்தில் இருக்கிற ‘வஸ்தாத் கிருஷ்ணன்’ மாஸ்டர்கிட்டே பயிற்சி எடுத்துக்கிட்டேன். அவரும், உதவிப் பயிற்சியாளர் சபரிநாத் அண்ணனும் கொடுத்த பயிற்சியும் ஊக்கமும்தான் என்னை தேசிய வீரனாக்கியிருக்கு’’ என்கிறார் நவீன் பாபு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick