சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கணித எழுத்தாளர்

பி
ரேசில் நாட்டு எழுத்தாளர், ஜூலியோ சீசர் என்கிற ஜூலியோ சீசர் டி மெலோ ஈ சௌசா (Julio Cesar de Mello e Souza). இவர் ஒரு கணிதப் பேராசிரியர். கணிதம் குறித்து அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கதைகளின் வழியே கணிதத்தின் மீதான ஈர்ப்பை உருவாக்கியவர். ‘மல்பா தஹான்’ என்ற புனைப்பெயரில் எழுத்தாளராக அறியப்பட்டார். இது, பெர்சிய மரபுப் பெயர். ‘இந்தியா மற்றும் அரபு நாடுகளிலிருந்தே கணிதம் வளர்ந்தது. அதனாலே, மல்பா தஹான் எனப் புனைப்பெயர் வைத்துக்கொண்டேன்’ என்றார். ‘ஆலீஸின் அற்புத உலகம்’ எழுதிய லூயி கரோல், ஒரு கணித மேதையே. அவரது நாவல்களில் கணிதத்தின் சூட்சுமங்களை அறியலாம். அதுபோல, மல்பா தஹான் எழுதிய ‘எண்ணும் மனிதன்’ என்ற நூலை வாசித்தால், கணிதம் மீது பெரும் ஆர்வம் உண்டாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick