இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பிறந்தநாள்

நா
ம், பள்ளிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பாடக்கூடிய ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை எழுதியவர். கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்தவர். நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ் கற்றுக்கொண்டார். மிகச்சிறந்த நாடக நூலான மனோன்மணியம் என்ற நூலை 1891-ம் ஆண்டு எழுதி வெளியிட்டார். நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலும் இந்த நூலில்தான் உள்ளது. திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை தலைமைப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவருடைய பிறந்தநாள் ஏப்ரல் 4, 1855.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்