இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

தீரன் சின்னமலை பிறந்த நாள்

ந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். 1801-ம் ஆண்டு ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ம் ஆண்டு ஓடாநிலைக் கோட்டையிலும், 1804-ம் ஆண்டு அரச்சலூரிலும்  ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் வெற்றி பெற்றவர், தீரன் சின்னமலை. போர் செய்து வெல்ல முடியாது என்று முடிவு செய்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து அவரைக் கைது செய்து1805-ம் ஆண்டு தூக்கிலிட்டனர். தீரன் சின்னமலையின் தியாகத்தை அவரது பிறந்த நாளில் (ஏப்ரல் 17 ) நினைவு கூர்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick