தமிழ்நாடு

ச.ஜெ.ரவி

அனிதா ‘சாட்டிலைட்’! 

ளி மண்டலத்தில் வாயுக்களின் அளவைக் கண்டறிந்து தெரிவிக்கும் சாட்டிலைட் ஒன்றைக் கண்டறிந்துள்ளார் திருச்சியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி வில்லட் ஓவியா. இந்த சாட்டிலைட் வரும் மே 6-ம் தேதி மெக்ஸிகோவுல இருக்குற தனியார் ஏவுதளத்திலிருந்து ஏவப்படவுள்ளது. சுமார் ஒரு கிலோ எடையிலான சாட்டிலைட்டுக்கு அனிதாவின் பெயரைச் சூட்டியிருக்கிறார் மாணவி வில்லெட் ஓவியா. “அனிதா அக்கா டாக்டர் ஆகணும்னு விரும்பினாங்க. ஆனா அந்த உரிமை அவங்களுக்கு மறுக்கப்பட்டுச்சு. டாக்டர் ஆகணுங்கறதுதான் என் விருப்பமும். அதுதான் இந்த சாட்டிலைட்டுக்கு அனிதா அக்காவோட பேரை வெச்சிருக்கேன்.” என்றார்.

இந்த சாட்டிலைட் விண்ணில் ஏவப்படும் அன்றுதான் தன் மருத்துவக் கனவை நனவாக்க நீட் தேர்வை எழுதுகிறார் வில்லெட் ஓவியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick