இது CSK ஹேண்ட் புக்!

மிழகம் முழுவதும் மஞ்சள் பூசிக்கொண்டுவிட்டது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ மீண்டும் வந்துவிட்டது. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்காகக் காத்திருந்த சேப்பாக்கம், பிஸி ஆகிவிட்டது. மீம்ஸ் முதல் யூடியூப் வீடியோ வரை எல்லாவற்றிலும் சி.எஸ்.கே ரெஃபரன்ஸ்தான். தனிப் பாடல்கள், வீடியோக்கள், மஞ்சள் டி-ஷர்ட்டுகள் என ரசிகர்கள் ஆரவாரத்திலிருக்கிறார்கள். இந்த ஐபிஎல் மற்றவர்களுக்கு எப்படியோ; சென்னை ரசிகர்களுக்குச் சரவெடிக் கொண்டாட்டம்தான். ஏனெனில், இது சிஎஸ்கே 2.0

தோனி, நாகஸ்வரம் ஊதுகிறார். பிராவோ, ஆட்டோவில் சுற்றுகிறார். ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் செய்கிறார். ஜடேஜா, தூக்கத்தில்கூட ஆடுவதை நிறுத்த மாட்டேன் என்கிறார். சீசன் தொடங்கும் முன்பே சிஎஸ்கே, தன் ரசிகர்களை என்டர்டெயின் செய்யத் தொடங்கியது. 2 ஆண்டுகள் வேடிக்கை பார்த்ததாலோ என்னவோ, ரசிகர்களும் கூடுதல் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick