தமிழ்நாடு | Tamilnadu Latest News - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

தமிழ்நாடு

ஜெ.ரவி

ஐந்து ஆண்டுக்குப் பிறகு நிரம்பிய மேட்டூர் அணை!

ர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கே.எஸ்.ஆர் அணைகள் நிரம்பியதால், அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து கடந்த 23-ம் தேதி அணை முழுக் கொள்ளளவை எட்டியது.  அணை வரலாற்றில் 39-வது ஆண்டாக நேற்று அணை நிரம்பியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2013-ம் ஆண்டில் முழுமையாக நிரம்பியது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அணை நிரம்பியுள்ளது. அணை நிறைந்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து, காவிரி ஆறு பாயும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  காவிரி ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close