வைகிங் படகு

தகவல்மு. பிரசன்ன வெங்கடேஷ்

டக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்கேன்டிநேவியாவுக்கு என வலுவான வரலாறு ஒன்று உண்டு. டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளை முழுவதுமாக உள்ளடக்கியும், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்தின் எல்லைப் பகுதிகள் சிலவற்றை உள்ளடக்கியும் உள்ள நிலப்பகுதி மொத்தமாக ஸ்கேன்டிநேவியா என்றழைக்கப்பட்டது. இந்த வடக்கு ஐரோப்பாவில் வாழும் மக்களே ‘வைக்கிங்ஸ்’ என்றழைக்கப்பட்டனர். கி.பி. 793 - 1066, வரலாற்றின் இந்தக் காலகட்டத்தில் வடக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த மக்கள் போருக்காவும் வணிகத்துக்காவும் கடல் கடந்தும் மேற்கு, கிழக்கு ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். இந்த வைக்கிங் மக்கள் அதிகமாகப் போரும் வணிகமும் செய்த இந்த 8-ம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டமே ‘வைக்கிங் ஏஜ்’ என்றழைக்கப்படுகிறது. வரலாற்றின் பல இடங்களில் வைக்கிங் வீரர்கள் கொடூரமான போராளிகளாக, வீரர்களாக அவர்களின் எதிரிகளால் பதிவு செய்யப்படுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் அவர்கள் பயணங்களுக்காகப் பயன்பட்ட கப்பல்களே ‘வைக்கிங் படகு’ என்றழைக்கப்படுகிறது. இந்த வைக்கிங் படகுகள் அதன் தேவைக்கேற்றவாறு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்