இந்தியா

காணாமல் போன ரயில் பெட்டி!

2014 நவம்பரில், ஆந்திராவைச் சேர்ந்த நிறுவனமொன்று தன்னுடைய பொருட்களை உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பியது. அதற்காக இந்திய ரயில்வேயில் சரக்குப்பெட்டி ஒன்றைப் பதிவுசெய்தது.

ஆனால், அந்த சரக்குப்பெட்டி உரிய இடத்துக்குச் சென்றுசேரவில்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று அந்நிறுவனம் பலமுறை விசாரித்தும் பதில் இல்லை. ஏனெனில், அந்தப் பெட்டி எங்கு சென்றது என்றே ரயில்வே துறைக்கே தெரியவில்லை. அவர்கள் எவ்வளவோ முயன்றுபார்த்தும் பெட்டியைக் கண்டறிய இயலவில்லை.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அந்தப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கெட்டுப்போய்விட்டன.

இத்தனை ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் அந்தப் பெட்டி எங்கே இருந்தது? அப்படி அதிகாரிகளுக்கே தெரியாமல் ஒரு பெட்டி மாயமாகப் போய்விட இயலுமா? ரயில்வே துறை இப்படி அலட்சியமாக நடந்துகொண்டால் தொழில் நிறுவனங்கள் எப்படித் தங்களுடைய பொருள்களை அதில் அனுப்புவார்கள்? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick