தமிழ்நாடு | Tamilnadu Latest News - Chutti Vikatan | சுட்டி விகடன்

தமிழ்நாடு

கலைஞர் காலமானார்!

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, வயது மூப்பு காரணமாக உடல் நலிவுற்று கடந்த 7-ம் தேதி, சென்னையில்  உயிரிழந்தார். 94 வயதை நிறைவு செய்துள்ள கருணாநிதியின் மறைவையடுத்து, அவரது உடல் அரசியல் தலைவர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி, தொடர்ச்சியாக 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராக இருந்து வந்தார். பொதுவாழ்வில் 80 ஆண்டுகள்; சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள்; கட்சித்தலைவராக 50 ஆண்டுகள் எனப் பல சாதனைகளைப் புரிந்த கருணாநிதி, இந்திய அரசியலில் 14 பிரதமர்களை கண்ட தலைவர் ஆவார். பத்திரிகையாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல் தலைவர் என, சமகாலத்தில் சினிமா, இலக்கியம்,  அரசியல் எனப் பல்துறைகளில் ஆளுமை கொண்ட ஒரே தலைவராக இருந்தவர் கருணாநிதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick