சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரீவைண்ட்

வெடிகுண்டு  வைத்த நாய்கள்.

ரண்டாம் உலகப் போரில் சோவியத் ராணுவத்தினர் ஏகப்பட்ட நாய்களை வளர்த்தனர். அந்த நாய்களுக்கு ராணுவப் பயிற்சியும் கொடுத்தனர். Anti-tank Dog என்று அந்த ராணுவ நாய்களை அழைத்தனர். சரி, அந்த நாய்களின் வேலை என்ன?

வெடிகுண்டை எடுத்துச் சென்று, யாருக்கும் தெரியாத வண்ணம் எதிரியின் ராணுவ டாங்கிகளுக்கு அடியில் வைத்துவிட்டு வந்துவிட வேண்டும். அந்த வெடிகுண்டில் டைம் செட் செய்யப் பட்டிருக்கும். குறித்த நேரத்தில் குண்டு வெடிக்க, எதிரியின் டாங்கி டமார்!

இரண்டாம் உலகப்போரில் எதிரி நாடான ஜெர்மனியின் டாங்கிகளை அழிக்க, சோவியத் இவ்விதமாக தனது ராணுவ நாய்களை வெடிகுண்டுகளுடன் ஏவிவிட்டது. ஒன்று நாய்கள் சொதப்பின. சரியாகக் குண்டுகளை வைக்கவில்லை. அல்லது டைமிங் சொதப்பியதில் குண்டுகள் வெடித்து, பாவம்... நாய்களே செத்துப்போயின. அல்லது அந்த நாய்கள் சோவியத்தின் டாங்கிகளுக்குக் கீழேயே வெடிகுண்டுகளை வைத்துவிட்டு வந்தன. காரணம், நாய்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போது சோவியத் டாங்கிகளைத்தான் பயன்படுத்தியிருந்தனர். அந்த நினைப்பில் ‘நன்றி கெட்ட நாய்கள்’, சொந்த டாங்கிகளையே தகர்த்தன.

இப்படி Anti-tank Dog திட்டம் பலத்த தோல்வியையே தழுவியது. வேறு சில நாடுகளும் இதே போன்று நாய்களை வைத்து முயற்சி செய்து பார்த்திருக்கின்றன. என்றைக்குமே இந்தத் திட்டம் வெற்றி பெற்றதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்