சிங்கப்பூரில் ஓர் இசைப் பயணம்!

வெற்றி

சிங்கப்பூரில் சென்ற மாதம் நடைபெற்ற ‘இன்டர்நேஷனல் கோரல் ஃபெஸ்டிவல்’ நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த 23 சுட்டிகள் பங்கேற்று அசத்தியிருக்கிறார்கள். ‘`பள்ளிப்பாடத்தைத் தாண்டிய அனுபவப் பாடம் தேவை என்பதற்காகவே, எங்கள் குழந்தைகளை சிங்கப்பூர் அழைத்துச்சென்றோம்’’ என்கிறார்கள் பெற்றோர்கள்.

முதல்முறையாக விமானத்தில் சென்று வந்த குதூகலம், மாணவி அவந்திகா குரலில்,  “நான் 4-ம் வகுப்பு படிக்கிறேன் சின்ன வயசிலிருந்தே பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். அம்மாதான், ‘நாம இன்னும் ரெண்டு மாசத்துல சிங்கப்பூர் போகப்போறோம். அங்கே நீ பெரிய மேடையில் பாடப்போறேன்’னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட்டா இருந்துச்சு. மந்தைவெளியில் இருக்கும் ராஜராஜேஸ்வரி மேடம்தான் எங்களுக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க. நாங்க 23 பேரும் குரூப்பா பாடினோம். எனக்கு இப்ப நிறைய ஃபாரின் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க” எனப் பூரிக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick