சுட்டி மெயில் | Readers Feedback letters - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

சுட்டி மெயில்

‘சூப்பர் ஹீரோஸ்’ பற்றிய புதிய தொடர் அருமை. இந்த இதழில் வந்த ‘சிகரங்களை வென்ற சீன் ஸ்வார்னெர்’, என்னை ஊக்கப்படுத்தினார்.

- எஸ்.பொன்னி, ஓமலூர், சேலம்.

சென்ற இதழ் சுட்டி விகடனில் வெளிவந்த சிறுகதைகள் அருமை. இதில் இடம்பெறும் படக்கதைகளை விரும்பிப் படிக்கிறேன்.

- மு.தமிழ்ச்செல்வி, சுந்தரமுடையான், இராமநாதபுரம்.

‘இவரைத் தெரிஞ்சுக்கலாம்’ பகுதியில் வந்த ‘மொட்டை மாமா’ என்கிற இனியன் பற்றிய தகவல் சூப்பர்.  அவர், எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிட்டார்.

- க.கலைமதி, நெல்லிக்குப்பம், கடலூர்.

வால்ட் டிஸ்னி உருவாக்கிய சுட்டிகளின் ஹீரோவான, ‘மிக்கி மவுஸு’க்கு 90 வயது பற்றிய கட்டுரை மிகவும் அருமை. அதை அட்டைப் படமாகவும் வெளியிட்டதுக்கு வாழ்த்துக்கள்.

 - க.யாழினி, பானாவரம், மேட்டூர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close