தருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்! | 200 information book about Dharmapuri - Chutti Vikatan | சுட்டி விகடன்

தருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்!

`நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம் 200’ பரிசளிப்பு விழா, டிசம்பர் 8-ம் தேதி, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி,  ``சுட்டி விகடனின் தருமபுரி 200 புத்தகம், அனைத்துப் போட்டி தேர்வுக்கும் ஏற்ற பல்வேறு தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது. மாணவர்களுக்கு OMR ஷீட் முறையில் தேர்வு எழுதவைத்து, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொடுத்த சுட்டி விகடனின் பணி,  பாராட்டுதலுக்குரியது. அதற்கு எனது நன்றிகள்” என்றார்.

மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, “தருமபுரி மாவட்டம் குறித்து 200 தகவல்களை வழங்கி, அந்தத் தகவல்களிலிருந்தே கேள்விகள் கேட்டு, போட்டித் தேர்வுடன் சிறப்புப் பரிசு வழங்குவது, மிகவும் மகத்தான பணி. அந்தச் சாதனைக்காகவே விகடன் குழுமத்தை மனதாரப் பாராட்டுகிறேன்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick