வண்ணப் பந்து வால் ஹேங்கிங்! | Easy Craft making ideas for kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வண்ணப் பந்து வால் ஹேங்கிங்!

ஹாய் சுட்டீஸ்... விடுமுறை வருது. உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க, ஈஸியான வால் ஹேங்கிங் கிராஃப்ட்டை சொல்லித் தருகிறார்கள், சாய் சம்யுக்தா மற்றும் அவர் அம்மா சோபனா.

தேவையானவை:

* உல்லன் நூல்கண்டு - 4 (விரும்பும் வண்ணங்களில் )

பலூன் - 7

கத்தரிக்கோல் - 1

க்ளிட்டர் செலோ டேப் - 2 (விரும்பும் வண்ணங்களில் )

ஃபெவிக்கால் - 1

வெவ்வேறு அளவிலான ஆரி ரிங் - 2 (வீட்டில் பயன்படுத்தாத குக்கர் காஸ்கெட்  முலமும் செய்யலாம்)

செய்முறை:

ஸ்டெப் - 1

பலூன்களை ஒரு சிறிய பந்து அளவுக்கு ஊதிக்கொண்டு, காற்று வெளியேறாமல் இருக்க, முடிச்சிடவும்.

ஸ்டெப் - 2

பலூன்கள் மீது ஃபெவிக்காலை அப்ளை செய்யவும்.

ஸ்டெப் - 3

பலூன் மீது வண்ண நூலை, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றவும்.

ஸ்டெப் - 4

நூல் சுற்றிய பலூனைச் சிறிது நேரம் காயவிடவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick