இந்தியா

என். சொக்கன்

 தமக்குத் தாமே கல்வி!

இந்தியாவில் லட்சக்கணக்கான மென்பொருள் நிபுணர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பலவிதமான கணினி மொழிகளில் மென்பொருள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கிவருகிறார்கள்.

ஆனால், இவர்கள் இந்தக் கணினி நுட்பங்களை எங்கே கற்றுக்கொள்கிறார்கள்? பள்ளியிலா, கல்லூரியிலா?

‘இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு மென் பொருளாளர்கள் சொந்தமாகத் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்கிறார்கள்’ என்கிறது புகழ்பெற்ற ஹேக்கர் ரேங்க் இணைய தளம்.

இன்றைக்கு, இணையத்தில் அநேகமாக எல்லாக் கணினி நுட்பங்களையும் கற்றுத் தருவதற்கான பயிற்சிகள், நூல்கள், மென்பொருள்கள் கிடைக்கின்றன. மாணவர்கள் தொடங்கி, தொழில்முறையில் நிரல் எழுதுவோர்வரை எல்லாரும் இவற்றைக்கொண்டு புதிய விஷயங்களைக் கற்கிறார்கள். நாளுக்குநாள் தொழில்நுட்பம் மாறிக்கொண்டிருக்கிற இன்றைய சூழலில், ஒருவர் புதிய விஷயங்களை எவ்வளவு வேகமாகக் கற்றுக்கொள்கிறார் என்பதுதான் முக்கியமான திறமை. அதற்கு ‘தானே கற்றுக்கொள்ளும்’ பழக்கம் மிக அவசியம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்