அமானுஷ்யம்

செல்லம்

மர்மம் நிரம்பிய பேபல் கோபுரம்

பண்டைய கால நகரங்களில் மிகவும் புகழ்பெற்றது, பாபிலோன். யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையே நிர்மாணிக்கப்பட்ட நகரம். உலகின் முதல் நாகரிகம் மலர்ந்த இடம். உலக அதிசயமான தொங்கும் தோட்டம் உருவான ஸ்தலம். ‘சொர்க்கத்தைத் தொடும் அளவுக்கு ஒரு கோபுரம் கட்டப்பட வேண்டும்’ என்று பைபிள் சொல்கிறது. அதை நிறைவேற்றும் விதமாகக் கட்டப்பட்ட கோபுரம்தான் பேபல் கோபுரம். இது அரசர்களுக்காகக் கட்டப்பட்டதா, அல்லது கடவுளருக்காகக் கட்டப்பட்டதா என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. இங்கே மனிதர்கள் திமிர் பிடித்து அலைந்தார்கள் என்பதால் இங்கே ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு மொழி பேசும்படி இறைவன் சபித்துவிட்டார் என்றும் ஒரு கதை உண்டு. இப்போது அந்தக் கோபுரம் புதர் மண்டி, ஒரு காட்சிப் பொருளாக இருக்கிறது என்பது மட்டும் நிஜம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick