தமிழரின் சைக்கிள் சவால்! - டெல்லி to நேபாள் - 1400 கி.மீட்டர் - 108 மணி நேரம்

பயணம்மு.பிரதீப் கிருஷ்ணா

டெல்லியில் தொடங்கி நேபாளம் வரை 1400 கி.மீ தூரத்தை 108 மணி நேரத்துக்குள் சைக்கிளில் பயணிக்கப் போகிறார் செந்தில் குமார். பி.ஆர்.எம் எனப்படும் நீண்டதூரப் பயணத்தில் பங்கேற்க உலகின் பல பகுதிகளிலிருந்து கலந்து கொள்ளும் 23 பேரில் இவரும் ஒருவர். இருட்டு, பனி, மழை பார்க்காமல் ஓட்ட வேண்டும். பட்டம் இல்லை, பரிசுத்தொகை இல்லை, அப்படி இருக்கையில், எதற்காக இவ்வளவு சவாலான பயணம்?

“எங்க வீட்ல, நாங்க பசங்க 3 பேரு. 2 அண்ணன்கள். சின்ன வயசுல, வீட்ல ஒரேயொரு பெரிய சைக்கிள்தான் இருந்துச்சு. அதை ஓட்டுறதுக்குக் காலைல சீக்கிரமே எந்திரிச்சு போட்டி போடுவோம். சைக்கிள்னா அவ்ளோ பிடிக்கும். ஸ்கூல் படிச்சு முடிக்கிற வரைக்கும் நான் சைக்கிள் மட்டும்தான் பயன்படுத்தினேன். 17 வயசுல சென்னை வந்தேன். இங்க எல்லோரும் கியர் வச்ச சைக்கிள் ஓட்றத பாத்து எனக்கும் அதுமேல ஆசை வந்துச்சு. அப்புறம் சென்னை சைக்கிளிங் க்ளப்ல சேர்ந்து, நிறைய ரேஸ்களில் ஓட்ட ஆரம்பிச்சேன். 200, 500, 1,000 என்று 1,200 கிலோமீட்டர் தூரம்வரை ஓட்டியிருக்கேன்” என்று சொல்லும் செந்திலை, இந்தப் பயணத்தில் இருக்கும் சவால்கள்தாம் மீண்டும் மீண்டும் அவரைக் கலந்துகொள்ள வைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick