சுட்டி ஸ்டார் நியூஸ்!

திகில் பாலம்... த்ரில் ஓவியம்!

சீனாவின் ஜாங்ஜியாஜி நகரில் உள்ள மஞ்சள் நதியின்மேல் 360 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான கண்ணாடிப் பாலம், ஆகஸ்ட் 20, 2016-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அது, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது, பாலத்தின் அடிப்பகுதியில் ஆங்காங்கே 3டி ஓவியங்களை வரைந்துள்ளனர். கொட்டும் நீர்வீழ்ச்சி, மலைகள் எனப் பல்வேறு ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. பாலத்தில் நின்றபடி கீழே பார்த்தால், நீர்வீழ்ச்சியின்மீது நிற்கும் த்ரில் அனுபவம் உண்டாகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை இருமடங்காகி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick