டெக் பிட்ஸ்

ர.சீனிவாசன்

ஒரு புக்

ஆசிரியர் : எரின் என்டிரடா கெல்லி. (32 பக்கங்கள், 8-12 வயது சுட்டிகளுக்கு.)

ஹாலோ, பிரபஞ்சமே

எதிர்பாராத நட்புகள், கொஞ்சம் அன்பு, நிறைய சாகசம் இதுதான் இந்த ஹலோ, யுனிவெர்ஸ் (ஹலோ, பிரபஞ்சமே) புத்தகம். ஒருவரின் பலவீனத்தை வைத்துக் கேலி, கிண்டல் செய்வது, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது, பள்ளிப் பருவத்தில் அவ்வப்போது நடக்கும் ஒரு தவறான நிகழ்வு. அதனால் நிகழும் விபரீதங்கள், அதைச் சரிசெய்ய நடக்கும் போராட்டம், நட்பின் வெற்றி, இதுதான் இந்தப் புத்தகம் சொல்லும் கதையின் சாராம்சம். இரண்டு சிறுவர்கள், இரண்டு சிறுமிகள் என நான்கு கோணத்தில் பயணிக்கும் கதை ஒருகோட்டில் இணைந்து, சுவாரஸ்ய சாகசக் கதையாக விரிகிறது.

ஒருவன் கூச்ச சுபாவம் உடையவன், இரக்க குணம் கொண்டவன், ஒரு சிறுமி மாற்றுத்திறனாளி. கேட்கும் திறன் சற்றுக் குறைவு. ஆனால், புத்திசாலி, மிகவும் தைரியமானவள். மற்றொரு சிறுமி வித்தியாசமான மன ஆற்றல் கொண்டவள். அவளின் குட்டித் தங்கை எப்போதும் அவளைப் பின்தொடர்வாள். மற்றொருவன் கூடைப்பந்தாட்டப் பிரியன். அவன் செய்யும் ஒரு செயல், கூச்ச சுபாவம் உடையவனையும் அவன் வளர்ப்புப் பன்றியையும் ஒரு மிகப்பெரிய ஆபத்தில் மாட்டிவிடுகிறது. இதிலிருந்து அவர்கள் மீள நம் குட்டீஸ் படை உதவுகிறது. அவர்களுக்கு இந்தப் பிரபஞ்சமும் எதிர்பாராத வகையில் உதவுகிறது. எளிய ஆங்கில நடையில், சுட்டீஸ் படிக்கும் வகையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick