இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் (1760)

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாளையக்காரர். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்தவர். அதனால் ஆங்கிலேயர் கேட்ட வரியைச் செலுத்த மறுத்தார். ஆங்கில ஆட்சியை அகற்றுவதற்காகச் சிவகங்கை மருது பாண்டியர்களோடும் பாளையக் காரர்களோடும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினார்.  பானர்மேன் தலைமையில் ஒரு பெரும் படை கட்டபொம்மனை எதிர்த்தது. புதுக்கோட்டை  மன்னர் விஜய ரகுநாதத் தொண்டமான் கட்டபொம்மனைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்.   1799-ல் கயத்தாறு என்னுமிடத்தில் தூக்கிலிடப்பட்டார். முதன்முதலாக வரியை எதிர்த்த இந்தப் புலி பிறந்தது ஜனவரி 3, 1760-ஆம் ஆண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick