தமிழ்நாடு பிட்ஸ்

ஜெ.ரவி

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ‘நேரமாற்றம்’

“10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் காலை 9.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறையில் அனுமதிக்கப்படுவர். அவர்கள் வினாத்தாளைப் படிப்பதற்கு 10 நிமிடமும் தங்களது விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்” என்ற நேரமுறை அமலில் இருந்தது. இதனால், தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டதை அடுத்து, தேர்வு நேரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுத் தற்போது 2018-2019-ம் கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். 10.10 மணிக்கு மாணவர்களிடம் வினாத்தாள் வழங்கப்படும். 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் மாணவர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 10.15 மணிக்குத் தேர்வு எழுதத் தொடங்க வேண்டும். மதியம் 12.45 மணிக்குள் மாணவர்கள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்