சுட்டி ஸ்டார் நியூஸ்!

ரோஸ்மில்க் ஏரி

நீருக்கு நிறம் கிடையாது. ஆனால், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ‘லேக் ஹில்லியர்’ (Lake Hillier) ஏரியானது இயற்கையாகவே ரோஸ்கலரில் இருக்கிறது. இது, எல்லாக் காலநிலைகளிலும் இதே நிறத்தில்தான் இருக்கிறது. இதிலுள்ள தண்ணீரை வெளியேற்றினாலும் ‘பிங்க்’ நிறம் மாறுவதில்லை. ‘துனாலியல்லா சலினா’    (Dunaliella salina) எனப்படும் உப்பு நீரூற்றுப் பாசிகள் இந்த ஏரியில் அதிகம் உண்டு. இந்த நுண்ணுயிர்களே ஏரியின் ஒளியை உள்வாங்கிப் பிரதிபலிக்கின்றன. அதனால், ரோஸ் மில்க் போன்று தண்ணீர் காட்சி அளிக்கிறது. இந்த ‘ரோஸ் மில்க்’ ஏரியைப் பார்த்து ரசிக்கலாம்; குடிக்க முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick